உலகம்

ஜோர்டானில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் உயிரிழப்பு

  • October 23, 2026
  • 0 Comments

ஜோர்டானின் கராக் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது தேவாலயத்திற்குள்ளும் அதைச் சுற்றியும் 150 முதல் 200 பேர் இருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 50 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கை

செம்மணி 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதி

  • October 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]

ஐரோப்பா

பிரான்ஸின் தலைநகருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

  • October 23, 2026
  • 0 Comments

பாரிஸுக்கு மேற்கே உள்ள இவெலின் (Yvelines) மாவட்டத்தில் இன்று துப்பாக்கிச் சூட்டுசம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு Sebastien Lecornu  அறிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது நோக்கம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை – மக்ரோன் அறிவிப்பு

  • October 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வரும் நாட்களில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிற்கு  பிறகே  மக்ரோன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர், கடந்த வார இறுதியில் நடந்த கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார். தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் வணிகங்களைப் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் பிரஜை ஜெர்மனியில் கைது

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜெர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தில் கைது  செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின் கீழ், வழக்கறிஞர்களால் வதிம் ஒய் Vadym Y. என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் ஜூலை 2025 முதல் இடைத்தரகர் வழியாக ரஷ்யாவின் ரகசிய சேவை அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதாக […]

உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்த டென்மார்க் – மொஸ்கோ கண்டனம்

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நோர்வே தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டென்மார்கின் இந்த நடவடிக்கைக்கு மொஸ்கோ கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்பே புரூஸ் Jeppe Bruus,  “நாங்கள் இரண்டு வெவ்வேறு ஏவுகணை அமைப்புகளை வாங்கியுள்ளோம்: ஒன்று நார்வேயின் ‘காங்ஸ்பெர்க்’ (Kongsberg) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஏவுகணைகள் – இவற்றை எங்களது எஃப்-35 […]

உலகம்

வெனிசுலாவில் சுதந்திரமான தேர்தலை நடத்த கோரி எதிர்கட்சியினர் போராட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று முதல் முறையாக எதிர்கட்சியினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்  நேற்று இடம்பெற்றுள்ளது. சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் பிற அரசியல் மாற்றங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததில் இருந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. […]

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக யாழ். மயிலிட்டி மக்கள் போராட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, மயிலிட்டி மக்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்துவரும் மக்கள், இன்று பெய்த கனமழைக்கு மத்தியிலும் தமது […]

உலகம்

குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க தீர்மானம் – நியூயார்கில் புதிய சட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

நியூயார்க் நகர மன்றம், 2028 ஜூன் மாதம் முதல் நகர வீதிகளிலும் சென்ட்ரல் பார்க்கிலும் குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தின் 51 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஏழுபேர் இதற்கு எதிராக வாக்களித்தனர், இருவர் வாக்களிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் நடைமுறையில் இருந்த குதிரை சவாரி தொழில் முடிவுக்கு வருவதாக […]

உலகம்

செர்பிய தேர்தல் – 14 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுக்கட்ட மாணவர்கள் அழைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

செர்பியாவில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்   மூத்த தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கியை Aleksandar Vucic  கட்சியில் இருந்து நீக்கக்கோரி மாணவர் இயக்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 150,000 ஆதரவாளர்கள் பங்கேற்று பெல்கிரேடில் Belgrade பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். மாணவர்களால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களைக் கொண்ட, தலைவரற்ற இயக்கமான ‘ Student List என்ற இயக்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன்மூலம் வுசிக்கின் வலதுசாரி ஜனரஞ்சக செர்பிய முற்போக்குக் […]