இலங்கை

செம்மணி 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதி

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது . உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பெரும்பாலானவை உடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளன என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகளும் உடல்களும் கரைந்துபோயிருக்கலாம் எனப் புது விளக்கம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள், செம்மணி விசாரணைக்குப் போதிய நிதியும், தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியம் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளைச் சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசு தயங்குகின்றது என்றும், குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்படும் முந்தைய அரசுகளை விட இந்த அரசு வேறுபட்டதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் நீதி கோருவோரும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்