செர்பிய தேர்தல் – 14 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுக்கட்ட மாணவர்கள் அழைப்பு
செர்பியாவில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மூத்த தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கியை Aleksandar Vucic கட்சியில் இருந்து நீக்கக்கோரி மாணவர் இயக்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சுமார் 150,000 ஆதரவாளர்கள் பங்கேற்று பெல்கிரேடில் Belgrade பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
மாணவர்களால் ஆதரிக்கப்படும் வேட்பாளர்களைக் கொண்ட, தலைவரற்ற இயக்கமான ‘ Student List என்ற இயக்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்மூலம் வுசிக்கின் வலதுசாரி ஜனரஞ்சக செர்பிய முற்போக்குக் கட்சியின் (SNS) 14 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வுசிக் எதிர்கொண்ட மிகப்பெரிய போராட்டம் இதுவாகும் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தேர்தல் பிரச்சாரமானது அச்சுறுத்தல்கள், கைதுகள், தாக்குதல்கள், பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட ஊடகச் சூழல் ஆகியவற்றால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது என்று குடிமைச் சமூகக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





