ஐரோப்பா

பிரான்ஸின் தலைநகருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

பாரிஸுக்கு மேற்கே உள்ள இவெலின் (Yvelines) மாவட்டத்தில் இன்று துப்பாக்கிச் சூட்டுசம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு Sebastien Lecornu  அறிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது நோக்கம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர் காரில் இருந்து இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும், கண்மூடித்தனமாக படுகொலை செய்யும் நோக்கத்துடன் செயற்பட்டதாகவும், இவெலின் மாவட்டத்தில் உள்ள ட்ராப்ஸ் (Trappes) நகரத்தின் மேயர் அலி ரபே, பி.எஃப்.எம்.டி.வி (BFMTV) தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்