ஐரோப்பா

வார இறுதி போராட்டம் – 70,000 படையினரை களமிறக்கும் பிரான்ஸ் அரசாங்கம்

  • October 24, 2026
  • 0 Comments

வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை சமாளிக்க 70000 பாதுகாப்பு படையினரை களமிறக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது வன்முறையாக உருமாறி வணிக நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டு பாரிய நிதியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டங்களை நினைவுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கமும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையிலேயே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் […]

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி ஞானசார தேரர் விவகார போராட்டம் நியாயமற்றது இலங்கை செய்தி

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி

  • October 24, 2026
  • 0 Comments

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்டப் பொறிமுறைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதை அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார். அத்துடன், நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றும் […]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், செம்மணி மனிதப் புதைகுழி என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் மிக முக்கிய ஆதாரம் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை செய்தி

இனப்படுகொலையின் சாட்சியமே செம்மணி

  • October 24, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், செம்மணி மனிதப் புதைகுழி என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் மிக முக்கிய ஆதாரம் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு […]

ஐரோப்பா

சிசிலியில் 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவு – சுனாமி எச்சரிக்கை

  • October 23, 2026
  • 0 Comments

இத்தாலி – சிசிலியின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால், 5.7 ரிக்டர் அளவு வரையிலான 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலேர்மோ Palermo, மெசினா Messina, டிராபானி Trapani  மற்றும் லிபாரி Lipari ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் பலேர்மோவிலிருந்து Palermo  60 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்ததுடன், தீவில் உள்ள பல நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக […]

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐரோப்பிய ராஜதந்திரிகள் துருக்கியில் முகாமிட்டு ஆராய்வு

  • October 23, 2026
  • 0 Comments

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் இராஜதந்திரிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் (Hakan Fidan) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு புதிய தாக்குதலும் பிராந்தியத்தில் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரித்த அவர், இஸ்தான்புல் மாநாட்டில் […]

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார். இலங்கை செய்தி

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணி குறித்து ஜனாதிபதி ஆராய்வு

  • October 23, 2026
  • 0 Comments

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் கட்டமைப்பு திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2026-02-27 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் ‘புதுப்பிக்கப்பட்ட அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் போது பின்பற்ற வேண்டிய அளவுகோல்கள்’ வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் நிதி […]

ரஷ்யாவினால் 2022 பெப்ரவரி முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி (Oleshky) நகரில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் (Melania Trump) ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தத்தை உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலகம் செய்தி

மெலானியா டிரம்பின் ராஜதந்திரம் வெற்றி: உக்ரைன் நகரில் போர் நிறுத்தம்

  • October 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவினால் 2022 பெப்ரவரி முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெற்கு உக்ரைனின் ஒலெஷ்கி (Oleshky) நகரில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் (Melania Trump) ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர்நிறுத்தத்தை உறுதிசெய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒலெஷ்கி நகரில் விரைவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என மூத்த உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ரஷ்யா இதுவரை எந்தக் கருத்துமே தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், […]

இலங்கை

பழிவாங்காதிருப்பதே ராஜபக்ஷக்களின் வழிமுறை – நாமலுக்கு கடிதம் எழுதிய மஹிந்த

  • October 23, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக நாமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடிதம் வருமாறு, “அன்பார்ந்த நாமல்! நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு உத்தேசித்த 2010 ஆம் ஆண்டில் என்னிடம் அனுமதி கோரியது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்குக் கூறிய அறிவுரையும் நினைவிருக்கும் என […]

ஐரோப்பா

பிரான்ஸில் போராட்டம் – பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தையும் களமிறக்கும் அரசாங்கம்

  • October 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்ற நிலையில் காவல்துறைக்கு ஆதரவாக இராணுவத்தையும் களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 20 சதவீதத்திற்கும் அதிகமான காவலர்கள் களத்தில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் வாழ்க்கை செலவு உயர்வை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.  அத்துடன் 2700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலப்படுத்தப்பட்ட காவல்துறைப் பாதுகாப்புடன், பயங்கரவாத எதிர்ப்பு போன்ற அபாயகரமான பணிகளுக்குப் […]

உலகம்

கென்ய தலைநகரில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

  • October 23, 2026
  • 0 Comments

கென்யாவின் தலைநகர் நைரோபியில் Nairobi கட்டுமானத்தில் இருந்த 12 மாடிக் கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மக்கள் வசித்து வந்ததாக கூறப்படுகின்ற நிலையில், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.