ஜோர்டானில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் உயிரிழப்பு
ஜோர்டானின் கராக் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 06 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது தேவாலயத்திற்குள்ளும் அதைச் சுற்றியும் 150 முதல் 200 பேர் இருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 50 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக, அரசுத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முகமது அல்-மொமானி Al-Momani தெரிவித்துள்ளார்.




