ஐரோப்பா

பிரான்ஸில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை – மக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸில் வரும் நாட்களில் சட்டவிரோத போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிற்கு  பிறகே  மக்ரோன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர், கடந்த வார இறுதியில் நடந்த கலவரங்கள் மற்றும் கொள்ளைகளுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களும் நாசகாரர்களுமே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

தொழிற்சங்கங்கள் போன்ற குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர அனுமதிக்கப்படும் என்றும், ஆனால் வணிகங்களைப் பாதுகாப்பதற்காக அவை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படலாம் என்றும் கூறினார்.

பிரான்ஸ் முழுவதும் உள்ள அதிகாரிகள் புதிய போராட்டங்களுக்குத் தயாராகி வரும் வேளையில் மக்ரோனின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கமைய லியோனில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரான்சின் முக்கிய மாணவர் சங்கமான UNEF, சனிக்கிழமையன்று பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கம், மத்திய பாரிஸ் வழியாக ஒரு பேரணி நடத்துவதற்கான திட்டங்களையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்