உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்த டென்மார்க் – மொஸ்கோ கண்டனம்

ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் நோர்வே தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் டென்மார்கின் இந்த நடவடிக்கைக்கு மொஸ்கோ கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்பே புரூஸ் Jeppe Bruus,  “நாங்கள் இரண்டு வெவ்வேறு ஏவுகணை அமைப்புகளை வாங்கியுள்ளோம்: ஒன்று நார்வேயின் ‘காங்ஸ்பெர்க்’ (Kongsberg) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஏவுகணைகள் – இவற்றை எங்களது எஃப்-35 (F-35) போர் விமானங்களிலிருந்து ஏவ முடியும்.

மற்றொன்று அமெரிக்க நிறுவனமான ‘கோவனன்ட்’ (Covenant) தயாரித்த ஏவுகணைகள் – இவற்றைத் தரையிலிருந்து ஏவ முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த ஏவுகணைகளின் எண்ணிக்கை, அவற்றின் விலை அல்லது அவை எப்போது டென்மார்க்கிற்கு வந்து சேரும் என்பது குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிடவில்லை.

மேலும் “நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு பாதுகாப்புச் சூழலில் நாம் இருக்கிறோம்” எனக் கூறிய அவர், டென்மார்க்கின் சொந்த தற்காப்புத் திறனையும், நேட்டோ (NATO) அமைப்பின் கூட்டுத் தடுப்பு ஆற்றலையும் வலுப்படுத்த புதிய ராணுவத் திறன்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்