ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை – 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடு

  • October 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலையின் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை காலமும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள முதல் சந்தர்ப்பம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம்  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.17 சதவீதம், அதாவது ஏறத்தாழ 17 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தனித்தனி ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தகவல்கள், அதிகரித்து வரும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சிக்கலான மருத்துவ வழக்குகளில் மருத்துவர்களை விட திறம்பட செயல்படும் AI தொழில்நுட்பம்

  • October 23, 2026
  • 0 Comments

மருத்துவர்களைப் போலவே நோயாளிகளைப் படிப்படியாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி ஒன்று,  திறம்பட செயல்படுவதாக மைக்ரோசாஃப்ட்  Microsoft  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த AI கருவியானது சிக்கலான மருத்துவ வழக்குகளைக் கையாள்வதில் மருத்துவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அக்டோபர் 22 அன்று ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி இந்த AI மாதிரியானது ஒரு ‘ஆர்கெஸ்ட்ரேட்டர்’ (orchestrator – ஒருங்கிணைப்பாளர்) மூலம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவ நிபுணர்கள் குழு […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்தது கிரீஸ்

  • October 23, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்தை கிரீஸ் அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது. இந்தத் தடை ஜனவரி 1, 2027 முதல் அமுலுக்கு வருகிறது. பயனர்களின் வயதைச் சரிபார்த்து, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியைக் கண்டறிய சமூக ஊடகத் தளங்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் உள்ளதாக கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸ் Kyriakos Mitsotakis  தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைப் பறிக்கும் “முடிவில்லாத ஸ்க்ரோலிங்” பழக்கத்தைக் […]

இலங்கையில் இருந்து கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் மூவர் உட்பட நால்வர் இன்று அதிகாலை தமிழகக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா இலங்கை செய்தி தமிழ்நாடு

‘லண்டன் கனவு’:தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது

  • October 23, 2026
  • 0 Comments

இலங்கையில் இருந்து கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் மூவர் உட்பட நால்வர் இன்று அதிகாலை தமிழகக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லிக்குச் செல்லும் நோக்கில் கடல் வழியாக இரகசியப் பயணத்தை மேற்கொண்டு, தமிழகப் பாம்பன் கடற்கரையை அடைந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் தரை வழியாக மன்னாரைச் சென்றடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டி ஒருவருக்கு ஜி.பி.எஸ். […]

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

சிறையிலிருந்து கட்சியை வழிநடத்தும் நாமல்

  • October 23, 2026
  • 0 Comments

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கெப்ரோன் (Hebron) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக் கரையில் பதற்றம்: இரு பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை

  • October 23, 2026
  • 0 Comments

  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கெப்ரோன் (Hebron) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். டெலம் (Telem) குடியேற்றப் பகுதிக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இருப்புப் படைப் பிரிவினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது ஆறு இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இஸ்ரேலின் அவசர ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இஸ்ரேலியத் தேர்தலை […]

உலகம்

ட்ரம்ப் – கிம் சந்திப்பிற்கு வாய்ப்பில்லை : உயர்மட்ட அதிகாரிகள் தகவல்

  • October 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையே 2026-ஆம் ஆண்டில் சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக, இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த  ஐந்து நபர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வடகொரியா மறுத்து வருகிறது.  இந்நிலையில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இழுபறியாக உள்ளது. ட்ரம்ப்-கிம் சந்திப்பை நடத்துவது குறித்து வடகொரியாவிடமிருந்து எந்தப் பதிலும் […]

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் முச்சதமும் , ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமும் , T20 போட்டியில் சதமும் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி ப்ரூக் (Harry Brook). செய்தி விளையாட்டு

கிறிஸ் கெயிலின் வரலாற்றுச் சாதனையை சமன் செய்த Harry Brook

  • October 23, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் முச்சதமும் , ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமும் , T20 போட்டியில் சதமும் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி ப்ரூக் (Harry Brook). இதற்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மட்டுமே இச்சாதனையைப் புரிந்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒருநாள் மும்முனைத் தொடர் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய ஹாரி ப்ரூக், வெறும் 116 பந்துகளில் 21 பவுண்டரிகள் […]

பின்புறக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு காரை எதிர்காலத்தை நோக்கி ஓட்ட முடியாது என்று குறிப்பிட்ட இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் (UNSC) அவசரமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர மறுசீரமைப்பைக் கோருகிறது இந்தியா

  • October 23, 2026
  • 0 Comments

பின்புறக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு காரை எதிர்காலத்தை நோக்கி ஓட்ட முடியாது என்று குறிப்பிட்ட இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் (UNSC) அவசரமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் 80 ஆண்டுகால பழைய அமைப்பு முறை, தற்காலத்தின் மிகக் கடுமையான உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் (Parvathaneni Harish), ஐ.நா. பொதுப்பேரவையில் சமமான […]

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் (Election Commission) உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த முறைப்பாட்டு தொடர்பில் மத்திய அமைச்சரவைச் செயலகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியா செய்தி

RTI மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்

  • October 23, 2026
  • 0 Comments

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் (Election Commission) உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த முறைப்பாட்டு தொடர்பில் மத்திய அமைச்சரவைச் செயலகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த உயரதிகாரி மீது தேர்தல் ஆணையர்கள் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாகப் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. ஆணையத்தின் நற்பெயருக்கும் அதன் பணிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் கடுமையானவையாகக் […]