ஐரோப்பா

பிரான்ஸில் போராட்டம் – பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தையும் களமிறக்கும் அரசாங்கம்

பிரான்ஸில் வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்ற நிலையில் காவல்துறைக்கு ஆதரவாக இராணுவத்தையும் களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 20 சதவீதத்திற்கும் அதிகமான காவலர்கள் களத்தில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் வாழ்க்கை செலவு உயர்வை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.  அத்துடன் 2700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பலப்படுத்தப்பட்ட காவல்துறைப் பாதுகாப்புடன், பயங்கரவாத எதிர்ப்பு போன்ற அபாயகரமான பணிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தலையீட்டுப் படைகளும் தேவைப்பட்டால் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் Laurent Nuñez அறிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைப் பாதுகாக்க வீரர்கள் உதவுவார்கள் என்றும்,  ஹெலிகாப்டர்கள், நீர்த்தாரை பீரங்கிகள் மற்றும் சென்டார்ஸ் எனப்படும் கவச வாகனங்களும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காவல்துறையினர் தங்களுக்கு விடுமுறைகளை ஒத்திவைப்பார்கள் என்றும், சுமார் 75 சதவீதமானோர் களத்தில் இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்