சிசிலியில் 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவு – சுனாமி எச்சரிக்கை
இத்தாலி – சிசிலியின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால், 5.7 ரிக்டர் அளவு வரையிலான 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலேர்மோ Palermo, மெசினா Messina, டிராபானி Trapani மற்றும் லிபாரி Lipari ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையம் பலேர்மோவிலிருந்து Palermo 60 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்ததுடன், தீவில் உள்ள பல நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இருப்பினும் காயங்கள் அல்லது சொத்து சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




