இலங்கை செய்தி

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணி குறித்து ஜனாதிபதி ஆராய்வு

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார்.

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் கட்டமைப்பு திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2026-02-27 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் ‘புதுப்பிக்கப்பட்ட அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் போது பின்பற்ற வேண்டிய அளவுகோல்கள்’ வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இதன் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும்.

அநுராதபுரம் புனித நகரத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, நடந்து சென்று அபிவிருத்தி பணிகளுக்குரிய காணி மற்றும் திட்டங்களை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி அப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

அநுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க மூன்று தடாகங்களை சுற்றியுள்ள பகுதியின் வீதி அபிவிருத்தி பணிகள் மற்றும் மேற்கு ஆராமய விகாரை வளாகத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகளையும் இதன்போது ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதன்பின்னர், ருவன்வெலிசாயவிற்கு அருகில் உள்ள எட்டு ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்குரிய காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களையும் பார்வையிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் புனித பூமியின் புராதன மற்றும் மத பின்னணியை பாதுகாக்கும் வகையில் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி தீர்வுகண்டு, அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலி மகா சாயவை வழிபட்டு ஆசி பெற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை