வார இறுதி போராட்டம் – 70,000 படையினரை களமிறக்கும் பிரான்ஸ் அரசாங்கம்
வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை சமாளிக்க 70000 பாதுகாப்பு படையினரை களமிறக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது வன்முறையாக உருமாறி வணிக நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டு பாரிய நிதியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டங்களை நினைவுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கமும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையிலேயே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லெ பென் இந்த தேர்தலில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்திய போராட்டங்களால் அவரின் நிலை வலுப்பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் இந்த மோசமனா சூழலை பென் தனக்கு சாதமாக பயன்படுத்த திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய அவர் ஓர்லியன்ஸில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவுள்ளார்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, பாரிஸின் தெற்கே உள்ள அந்த நகரத்திற்கு எதிர்-போராட்டக்காரர்களும் வருவதால் மோதல்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




