ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐரோப்பிய ராஜதந்திரிகள் துருக்கியில் முகாமிட்டு ஆராய்வு

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மோதலுக்கு இராஜதந்திரமே ஒரே தீர்வு என்று துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் இராஜதந்திரிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாநாடு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் (Hakan Fidan) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு புதிய தாக்குதலும் பிராந்தியத்தில் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எச்சரித்த அவர், இஸ்தான்புல் மாநாட்டில் பங்கேற்ற பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சவூதி அரேபியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய அனைத்து நாடுகளும் மோதல்கள் மேலும் விரிவடைவதை எதிர்ப்பதுடன், இராஜதந்திர அணுகுமுறையே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி