உலகம்

வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு ட்ரம்ப் நிர்வாகமே காரணம் – ஒபாமா குற்றச்சாட்டு

  • October 25, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமே காரணம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் 3 அன்று இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  கிளீவ்லாந்தில் Cleveland வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நவீன காலத்தில் நாம் கண்டிராத குழப்பம், கொடுமை, ஊழல் மற்றும் திறமையின்மை ஆகிய […]

உலகம்

கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் – ஹூதிகள் எச்சரிக்கை

  • October 25, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹூதி குழுவினர் இன்று அதிகாலை இந்த எச்சரிக்கையை  விடுத்துள்ளனர். குறித்த விமான நிலையம் தாக்குதல் இலக்காக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹூதி குழுவின் செய்தி தொடர்பாளர், அந்த விமான நிலையம் பாதுகாப்பற்றது என்றும், அது தொடர்ந்து ஒரு “இராணுவ இலக்காக” இருக்கும் என்றும் கூறினார். கிங் காலித் விமான நிலையம், […]

ஐரோப்பா

பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

  • October 25, 2026
  • 0 Comments

பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நிறைவு பெறும். மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் இலியானா அயோடோவா (61) Iliana Iotova, மற்றும் முன்னாள் இடைக்காலப் பிரதமர் ஆண்ட்ரி கியூரோவ் (50) Andrey Gyurov ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இயோடோவா வெற்றி பெற்றால், பல்கேரியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். அந்நாட்டில் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் […]

இலங்கை

வங்காள விரிகுடா கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்தப் பகுதி – 100MM மழை பெய்யும்

  • October 25, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15.5° வடக்கு அட்சரேகை மற்றும் 91.0° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளதாகவும்  அத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு இன்று வலுப்பெற்று வங்காள விரிகுடா கடல் பகுதியின் கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள தென்கிழக்குப் பகுதிகளுக்கு மேல் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்றும் […]

உலகம்

தேர்தலுக்கு இன்னும் 02 நாட்கள் – நெதன்யாகுவிற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

  • October 25, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக டெல் அவிவில் நேற்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘அக்டோபர் கவுன்சில்’ (October Council) என்ற அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. . 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் நான்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் இளைஞர்கள் வெறியாட்டம் – நகைக்கடைகள் சூறையாடப்பட்டன

  • October 25, 2026
  • 0 Comments

பிரான்ஸில் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் போராட்டக்காரர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் இரவு வேளையில் அமைதியான போராட்டங்கள் மோதலாக மாறியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4,10,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் கணிப்பிட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளன. தலைநகர் பாரிஸின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 1,10,000 பேர் பங்கேற்ற பிரதான போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு […]

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. உலகம் செய்தி

ட்ரம்பின் எச்சரிக்கையால் ஈரான் கொதிப்பு: பதிலடி குறித்தும் அதிரடி அறிவிப்பு

  • October 24, 2026
  • 0 Comments

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீது மீண்டும் பாரிய தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் எனத் தெரிவித்தார். போரின் ஆரம்பத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட விரிவான குண்டுவீச்சுத் தாக்குதலான ‘எபிக் பியூரி’ (Epic Fury) […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இடைக்கால ஒப்பந்தம் தோல்வியடைய அமெரிக்காவே காரணம்

  • October 24, 2026
  • 0 Comments

ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, ஒப்பந்தத்தை எட்டுவதற்கான புதிய முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அரச தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட உரையின்போது கருத்துத் தெரிவித்த பெசெஷ்கியான், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்கா அதனைச் சீர்குலைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார். “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். அமெரிக்கர்கள் அனைத்தையும் குழப்பிவிட்டனர். இருப்பினும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் […]

ராஜீவ் காந்தியுடனான காதல் பயணம்: மனம் திறந்தார் சோனியா காந்தி இந்தியா செய்தி

ராஜீவ் காந்தியுடனான காதல் பயணம்: மனம் திறந்தார் சோனியா காந்தி

  • October 24, 2026
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான தனது காதல் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்சோனியா காந்தி, முதன்முறையாக ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 1965ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள சிறிய கிரேக்க உணவகம் ஒன்றில் ராஜீவ் காந்தியை முதன்முதலாகச் சந்தித்த அனுபவத்தை அவர் காணொளி மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தச் சந்திப்பின்போது ராஜீவ் காந்தியின் தோற்றமும், மென்மையான குணமும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பொதுவான […]

ஐரோப்பா

ரஷ்யாவில் ரயிலுடன் மோதிய பேருந்து – 06 பேர் பலி

  • October 24, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தூர கிழக்கு தன்னாட்சி பகுதியில்  ரயில் ஒன்றுடன் சிறிய ரக பேருந்து  ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பேருந்தானது  சிவப்பு சமிக்ஞையை மீறி லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.