இலங்கை

வங்காள விரிகுடா கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்தப் பகுதி – 100MM மழை பெய்யும்

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு 15.5° வடக்கு அட்சரேகை மற்றும் 91.0° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளதாகவும்  அத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த அமைப்பு இன்று வலுப்பெற்று வங்காள விரிகுடா கடல் பகுதியின் கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள தென்கிழக்குப் பகுதிகளுக்கு மேல் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்கு, சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்