மென்செஸ்டரில் கத்திக் குத்துதாக்குதல் – 27 வயது இளைஞர் பலி
மென்செஸ்டரின் Manchester க்ரம்ப்சால் Crumpsall பகுதியில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறை விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அடர் நிற ஆடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்திருந்த ஒரு குழுவால் அவர் தாக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்தாரிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





