செய்தி விளையாட்டு

கடைசிப் பந்துவரை நீடித்த பரபரப்பு: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா

ஓமானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட்டால் வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஓமானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட்டால் வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

சனிக்கிழமை (14) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 107 ஓட்டங்களையும், அப்துல் காதிர் 80 ஓட்டங்களையும், அணித்தலைவர் பர்ஹான் யூசுப் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி சார்பில் காவ்யா பட்டேல் 4 விக்கெட்டுகளையும், சி. வெங்கடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

338 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், அணித்தலைவர் லக்ஷ்யா ராய்ச்சந்தனி 80 ஓட்டங்களையும், ஆர்யவீர் சேவாக் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியை நோக்கிச் சென்ற நிலையில், மொஹித் உல்வா மற்றும் மனால் சௌஹான் ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினர்.

மொஹித் உல்வா ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும், மனால் சௌஹான் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் கடைசிப் பந்து வரை நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்று ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

இதன்மூலம் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி ஒன்பதாவது முறையாக ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி