இலங்கை

பெலாரஸ் செல்லும் இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு சலுகை – விசா கட்டணம் இரத்து

உயர்கல்வி பயில்வதற்காக முதன்முறையாக பெலாரஸ் செல்லும் இலங்கை மாணவர்களுக்கான வருகை விசா கட்டணத்தை இரத்து செய்ய பெலாரஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 மே மாதம் அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி உயர்கல்விக்காக முதன்முறையாக பெலாரஸிற்குச் செல்லும் இலங்கை மாணவர்கள், வருகை விசா கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள்.

மேலும், ஏற்கனவே பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களைச் சந்திக்க விரும்பும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசா நடைமுறைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளையும் பெலாரஸ் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகள், பெலாரஸில் உயர்கல்வி வாய்ப்புகளைத் தேடும் இலங்கை மாணவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, அவர்களது குடும்பத்தினர் அவர்களைச் சென்று சந்திப்பதை எளிதாக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்