பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்
பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நிறைவு பெறும்.
மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் இலியானா அயோடோவா (61) Iliana Iotova, மற்றும் முன்னாள் இடைக்காலப் பிரதமர் ஆண்ட்ரி கியூரோவ் (50) Andrey Gyurov ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இயோடோவா வெற்றி பெற்றால், பல்கேரியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார்.
அந்நாட்டில் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் சடங்கு ரீதியிலான அதிகாரங்களை மட்டுமே கொண்டதாக காணப்படுகிறது.
இருப்பினும் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் பல்கேரியாவின் கருங்கடல் கடற்கரைப் பகுதி வரை பரவியுள்ள சூழலில், இந்த தேர்தல் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
முன்னணியில் உள்ள அதிபர் வேட்பாளர்கள் இருவரும் ரஷ்யாவின் அத்துமீறல் செயற்பாடுகளுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




