கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் – ஹூதிகள் எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹூதி குழுவினர் இன்று அதிகாலை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
குறித்த விமான நிலையம் தாக்குதல் இலக்காக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹூதி குழுவின் செய்தி தொடர்பாளர், அந்த விமான நிலையம் பாதுகாப்பற்றது என்றும், அது தொடர்ந்து ஒரு “இராணுவ இலக்காக” இருக்கும் என்றும் கூறினார்.
கிங் காலித் விமான நிலையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்காக முறையே 1 மற்றும் 2-வது முனையங்களை (Terminals) ஒதுக்கப்போவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




