ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

ஹட்டனில் ஒரே இரவில் நான்கு கடைகளில் கொள்ளை

  • October 25, 2026
  • 0 Comments

ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை ஒரே இரவில் நான்கு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகரின் சந்தி வீதியொன்றில் அமைந்துள்ள மூன்று நகைக்கடைகள் மற்றும் ஒரு சில்லறை வர்த்தக நிலையம் ஆகியவற்றிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடைகளுக்குள் புகுந்த சந்தேகநபர், அங்கிருந்த பொருட்களையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, நகைக்கடைகளின் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறப்பதற்கு சமையல் எரிவாயு தீப்பற்றும் கருவியைப் பயன்படுத்தி […]

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று (25) லாகூரில் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

  • October 25, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று (25) லாகூரில் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் அணி, இப்போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், இலங்கைக்கு எதிரான போட்டியில் 429 ஓட்டங்களைப் பாதுகாக்கத் தவறி அதிர்ச்சித் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தப் போட்டியில் ஹாரி புரூக் […]

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்து தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தியா செய்தி

சவுதி அரேபியாவுக்கான இந்திய விமான சேவை ரத்து நீடிப்பு

  • October 25, 2026
  • 0 Comments

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்து தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரியாத் மற்றும் தம்மாம் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவை ரத்துகளை நவம்பர் 7ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் […]

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். இலங்கை செய்தி

ஜனநாயகத்துக்கு ஆபத்து: பதறுகிறது மஹிந்த அணி

  • October 25, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கான இறுதி யாத்திரையாகும். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்குப் பேராபத்தாகவே அமையும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார கூறியவை வருமாறு: “தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டமூலங்களைக் கொண்டுவந்து, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து வருகின்றது. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ […]

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

புதிய சட்டமூலம் ஆபத்து: NPP அரசுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

  • October 25, 2026
  • 0 Comments

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ள போதிலும், நீண்டகால ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டு வரப்படுகின்ற இந்தச் சட்டமூலத்திலும் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு மிகப் பரந்துபட்டதும், தெளிவற்றதுமான வரைவிலக்கணமே […]

ஐ.நா. சபையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது, பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்களின் நலனுக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியா செய்தி

சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

  • October 25, 2026
  • 0 Comments

ஐ.நா. சபையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது, பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்களின் நலனுக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மன்றத்தைப் பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகப் பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டிய இந்தியா, அந்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இராணுவத்தின் உத்தரவுகளுக்கு ஏற்பச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூன்றாவது குழுவில் இடம்பெற்ற சிறுபான்மையினர் தொடர்பான கலந்துரையாடலின்போது, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் […]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒடிசா மாநில விஜயத்தை முன்னிட்டு, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் எட்டு அடி உயர மணல் சிற்பமொன்றை உருவாக்கி வரவேற்பளித்துள்ளார். இந்தியா செய்தி

பிரதமர் மோடி ஒடிசா பயணம்: மணல் சிற்பம் மூலம் வரவேற்பு

  • October 25, 2026
  • 0 Comments

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒடிசா மாநில விஜயத்தை முன்னிட்டு, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் எட்டு அடி உயர மணல் சிற்பமொன்றை உருவாக்கி வரவேற்பளித்துள்ளார். ஒடிசாவின் கலாசாரப் பாரம்பரியத்தையும் இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒடிசாவின் கட்டடக்கலை மற்றும் கலாசார அடையாளமாக விளங்கும் கோணார்க் சக்கரத்துடன், இந்திய மத்திய வங்கியின் (RBI) தரவு மையத்தைப் பிரதிபலிக்கும் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் […]

ஆஸ்திரேலியாவின் புதிய விமான நிலையமான மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Western Sydney International – WSI) ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் முதலாவது பயணிகள் விமானம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு

  • October 25, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் புதிய விமான நிலையமான மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Western Sydney International – WSI) ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் முதலாவது பயணிகள் விமானம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. நான்சி-பேர்ட் வால்டன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பயணிகள் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஜெட்ஸ்டாரின் JQ362 என்ற உள்நாட்டு விமானம், கோல்ட் கோஸ்ட் நகரை நோக்கி காலை 11 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் […]

ஈரான்மீது அமெரிக்கா நாளையே தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது தெஹ்ரானுடன் மிகப்பெரிய, சிறப்பான ஒப்பந்தமொன்றை எட்டக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரான் மீது நாளையே தாக்குதல் நடத்தப்படலாம்: ட்ரம்ப் எச்சரிக்கை

  • October 25, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா நாளையே தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது தெஹ்ரானுடன் மிகப்பெரிய, சிறப்பான ஒப்பந்தமொன்றை எட்டக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்து அவர் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான சாத்தியமான தாக்குதல் தொடர்பான தீர்மானம் எந்தக் கட்டத்தில் உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து […]

இத்தாலியின் முக்கிய நகரங்களில் போர் எதிர்ப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பாணியில் இத்தாலியிலும் வன்முறை வெடிப்பு

  • October 25, 2026
  • 0 Comments

இத்தாலியின் முக்கிய நகரங்களில் போர் எதிர்ப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஒக்டோபர் 24) நடைபெற்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. டுரின், ரோம் மற்றும் போலோன்யா ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் […]