உலகம்

தேர்தலுக்கு இன்னும் 02 நாட்கள் – நெதன்யாகுவிற்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக டெல் அவிவில் நேற்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘அக்டோபர் கவுன்சில்’ (October Council) என்ற அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

. 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் நான்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் 120 இடங்களில், ஐசென்கோட்டின் கூட்டணிக்கு 52 இடங்களும், நெதன்யாகுவின் கூட்டணிக்கு 50 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆகவே இந்த தேர்தல் நெதன்யாகுவின் கூட்டணி கட்சிக்கு பாரிய சவாலாகவே காணப்படும் என கூறப்படுகின்ற நிலையில் கூடுதல் சுமையாக இந்த போராட்டமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்