இலங்கை செய்தி

அரசியல் திருப்பம்: சஜித் அணி ஆதரவுடன் NPP யின் பட்ஜட் நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள தனமல்வில பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பெண் உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள தனமல்வில பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பெண் உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்ததால் வாக்குகள் சமநிலையில் முடிவடைந்தன.

இதனையடுத்து, தவிசாளரின் தீர்மானிக்கும் வாக்கைப் பயன்படுத்தி வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர் ஒருவர் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த நவம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 14 உறுப்பினர்களும், எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களித்ததால் அது மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

அன்றைய வாக்கெடுப்பின்போது ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சுகவீனம் காரணமாகவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் வேறு காரணத்தாலும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

தணமல்வில பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 16 ஆசனங்களும், எதிர்க்கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 18 ஆசனங்களும் உள்ளன.

இதேவேளை, வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது சபை உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறு கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை