உலகம்

உலகின் முதல் மின்சார விமானம் – சோதனை பயணத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தது சீனா

சீனாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, 19 பயணிகள் பயணிக்கக்கூடிய CE-25A மின்சார வணிக ரீதியிலான விமானம்,  தனது முதல் மனிதர்கள் பங்கேற்ற சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இது அந்நாட்டின் மின்சார விமானத் துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

10 டன் எடை கொண்ட இந்த விமானம், இன்று இரு விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளருடன் தனது சோதனைப் பயணத்தை மேற்கொண்டது.

குறித்த விமானம் 16 நிமிடங்கள் 38 வினாடிகள் வானில் பறந்து 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது.

இந்த விமானத்தைத் தயாரித்த ‘கமர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சைனா’ (COMAC) நிறுவனம், சோதனை முழுவதும் விமானம் சீராகச் செயல்பட்டதாகவும், அதன் அனைத்துச் செயல்பாட்டு அளவீடுகளும் எதிர்பார்த்தபடியே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

CE-25A என்பது COMAC நிறுவனத்தின் முதல் மின்சார வணிக ரீதியிலான விமானமாகும். இது முக்கியமாக நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூரப் பயணிகள் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் அதிகபட்ச புறப்பாடு எடை 10 டன்கள் ஆகும். இது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்