ரஷ்யாவில் ரயிலுடன் மோதிய பேருந்து – 06 பேர் பலி
ரஷ்யாவின் தூர கிழக்கு தன்னாட்சி பகுதியில் ரயில் ஒன்றுடன் சிறிய ரக பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பேருந்தானது சிவப்பு சமிக்ஞையை மீறி லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




