பிரித்தானியாவில் மூத்த மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு
இங்கிலாந்தில் உள்ள மூத்த மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிரித்தானிய மருத்துவச் சங்கம் (BMA) இதனை அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் இவெட் கூப்பர் Yvette Cooper, ஊதியம் மற்றும் பணிச் சூழல் குறித்த முறையான பேச்சுவார்த்தைகளை நான்கு வாரங்களுக்குள் நடத்த ஒப்புக்கொண்டால், இந்த வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க முடியும் என்று அச்சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
வேலைநிறுத்த காலத்திலும் அவசர மருத்துவச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும், இதற்காக, கிறிஸ்துமஸ் தினத்தன்று பின்பற்றப்படும் பணியாளர் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள 2.4 சதவீத ஊதிய உயர்வைச் சங்கம் விமர்சித்துள்ளதுடன், 17 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில், தற்போதைய ஊதியத்தின் உண்மையான மதிப்பு நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மூத்த மருத்துவர்கள் கடந்த 2023-ம் ஆண்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும், அரசாங்கத்துடனான அவர்களது கருத்து வேறுபாடு கடந்த 18 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




