ஐரோப்பா

சூடானில் போர் புரிந்த தலைவர்கள் மீது பிரித்தானியா தடை விதிப்பு

சூடான் போரின் போது பணியாற்றிய 15 இராணுவத் தளபதிகள், போராளிக் குழுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை காரணங்களாக குறிப்பிட்டே இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவின் கீழ் விரைவு ஆதரவுப் படைகள் மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் தளபதிகள், அத்துடன் இராணுவத்துடன் கூட்டணி வைத்துள்ள ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அடங்குகின்றனர்.

சூடான் போரின் மையப் புள்ளியாக மாறிய வடக்கு டார்ஃபூர் தலைநகரான அல்-ஃபஷீர் al-Fashir,  வீழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சூடானுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆதரவிற்காக கூடுதலாக 15 மில்லியன் பவுண்டுகள் வழங்கவுள்ளதாகவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்