ஹாலோவீன் வாரம் – பிரான்ஸில் போராட்டத்திற்கு அழைப்பு
வரவுள்ள வார இறுதி நாட்களிலும் பிரெஞ்சு தெருக்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.
வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹாலோவீன் மாலைப் பொழுது பாரம்பரியமாகவே சற்று கலகலப்பாக இருக்கும். அது மீண்டும் சிக்கலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் பல வாரங்களாக தொடரும் போராட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த போராட்டங்கள் மாணவர்கள் மத்தியில் இருந்த அதிருப்தியையும் தாண்டி வெகுவாக விரிவடைந்துள்ளது.
சில இடங்களில் இடம்பெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் நாட்டின்மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




