நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நவம்பர் 3 விவாதம்

  • October 28, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கூடிய நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்படவிருக்கும் மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. 50 குற்றச்சாட்டுகளுடன் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் […]

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

நாமலுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளுடன் குற்றப் பத்திரிகை தாக்கல்

  • October 28, 2026
  • 0 Comments

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் அசங்க போதாரகமவிடம் இதனைத் தெரிவித்தது. ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, 59 சாட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை உள்ளடக்கிய […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி அடுத்து என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • October 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட LTTE உறுப்பினர் – தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

  • October 27, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டார். அங்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, […]

ஐரோப்பா

போதைமருந்து கொடுத்து ஒரு தசாப்தமாக பாலியல் துஷ்பிரயோகம் – 04 பிரித்தானியர்களிடம் விசாரணை

  • October 27, 2026
  • 0 Comments

போதைப் மருந்து கொடுக்கப்பட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பிரித்தானிய பிரஜைகளிடமும் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 50 வயதான பிலிப் யங் என்பவர் தனது  மனைவியை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடன் மேலும் மூன்று ஆண்களும் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிலிப் யங் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று […]

ஐரோப்பா

இத்தாலி பிரதமர் மெலோனியின் மின்னஞ்சலை குறிவைத்து சைபர் தாக்குதல்?

  • October 27, 2026
  • 0 Comments

சமீபத்திய நாட்களில் இத்தாலியின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலில், பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் மின்னஞ்சல் கணக்கும் குறிவைக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  எந்தப் பாதுகாப்பு அவசரநிலையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கத் தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் அவருடைய நாடாளுமன்ற மின்னஞ்சல் அல்ல என்று மெலோனியின் அலுவலகம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல், பிரதிநிதிகள் சபையில் உள்ள மற்ற சட்டமியற்றுபவர்களையும் […]

உலகம் முக்கிய செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் – நிலைமாற்றப்பட்டுள்ள ஆயுதங்கள்

  • October 27, 2026
  • 0 Comments

வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான நீண்டகால கருத்து வேறுபாடுகள், ஒரு மோதலாக உருவெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் எல்லையருகே நடந்த வெடிவிபத்தில் மூன்று தென் கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைடி அடுத்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அதேநேரம் இவ்விரு நாடுகளும் கடந்  7 தசாப்தங்களுக்கும் மேலாக முரண்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வட கொரிய ஆயுதங்கள் தென் கொரியாவை […]

இந்தியா

அவசரகாலங்களிலும் குடிமக்களை பாதுகாக்கும் இந்தியா – பியூஷ் கோயல் நெகிழ்சி

  • October 27, 2026
  • 0 Comments

அவசர காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் இந்தியா தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அவசர காலங்களில் பல நாடுகள் பயண ஆலோசனைகளை வழங்குவதோடு தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றன என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், பாதுகாப்பாக தாயகம் திரும்ப விரும்பும் தனது குடிமக்களை மீட்டு வர இந்தியா நடைமுறை […]

ஐரோப்பா

விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து – மாணவர் விசாவிற்கு கட்டுப்பாடு

  • October 27, 2026
  • 0 Comments

உலகின் பல வளர்ந்த நாடுகள் தற்போது குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அரசாங்கம் இன்று (27) முதல் மாணவர் விசா விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. இதன் கீழ், ஆராய்ச்சி அடிப்படையிலான முதுகலைப் பட்டங்களுக்காக நியூசிலாந்துக்கு வரும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற வேலைவாய்ப்பு உரிமைகள் நீக்கப்பட்டு, வாரத்திற்கு 25 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்களின் ஆங்கில மொழித் தகுதிகளும் கடுமையாகக் கருத்தில் கொள்ளப்படும் என்றும், மாணவர் விசாக்களை இடைநிறுத்தம் செய்ய […]

உலகம்

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் – கிரீஸ் உள்ளிட்ட 04 நாடுகள் கண்டனம்

  • October 27, 2026
  • 0 Comments

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் பிராந்தியப் பாதுகாப்புக்கும் சர்வதேச சட்ட ஒழுங்கிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கிரீஸுடன் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன. லிபிய நாடாளுமன்ற கடந்த வாரத்தில் துருக்கியுடனான கடல் எல்லைகள் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்நடவடிக்கைக்கு கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உடனடியாக இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன்   ஐக்கிய நாடுகள் சபையில் கிரீஸ் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் George Gerapetritis கூட்டறிக்கை […]