பிரதமருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், நேற்று பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.
கல்விப் பரிமாற்றங்கள், வர்த்தக வாய்ப்புகள், பேரிடர் தயார்நிலை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தற்போதைய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு புல்பிரைட் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சிறிலங்காவில் அமைதிப்படைத் திட்டத்தை விரிவுபடுத்துதல் ஆகியன குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களை மேலும் வளர்த்து, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க தூதுவர் மேயர் கூறினார்.




