IS குழுவில் சேர்ந்தததாக குற்றச்சாட்டு – 07 பிரான்ஸ் பிரஜைகளுக்கு சிறை தண்டனை
07 பிரான்ஸ் நாட்டினருக்கு ஈராக் நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
IS குழுவில் சேர்ந்ததற்காகவே அவர்கள் நீதிமன்ற தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு குழுவில் சேர்ந்தது மற்றும் அச்சத்தைப் பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் இளமைப் பருவம் காரணமாக, அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றம் முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் அப்பாஸ் அல்-மாலிகி, இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
2014-ல் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய இஸ்லாமிய அரசு குழுவானது, 2019-ல் அமெரிக்க தலைமையிலான கூட்டணி மற்றும் உள்ளூர் படைகளால், அது சுயமாக அறிவித்த பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
அந்தப் பயங்கரவாதக் குழுவின் எஞ்சியவர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர், மேலும் அதன் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




