இந்தியா செய்தி

பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இந்திய விமானிக்கு UAE இல் கௌரவ விருது

சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது.

சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், செவ்வாய்க்கிழமை (27) விமானப் பணிக்குழுவினருக்கு “ஆர்டர் ஒப் சயீத் II” (முதலாம் வகுப்பு) என்ற உயரிய சிவிலியன் விருதை வழங்கினார்.

இந்த விருதை துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கினார்.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் பயணித்த ப்ளைதுபாய் விமானம் FZ1073 இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் மீது சக விமானி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, விமானம் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது.

தாக்குதலில் காயமடைந்த தலைமை விமானி, கடுமையாகப் போராடி விமானி அறையின் கதவைத் திறந்தார். இதையடுத்து, பயணிகளும் விமானப் பணியாளர்களும் இணைந்து தாக்குதல் நடத்திய சக விமானியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், விமானத்தில் பயணித்திருந்த மற்ற விமானிகளின் உதவியுடன் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின்போது விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விமானக் குழுவினர் வெளிப்படுத்திய துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பை ஐக்கிய அரபு இராச்சியத் தலைவர்கள் பாராட்டினர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தலைமை விமானி ஸ்மித் மச்சாரை முன்னதாகச் சந்தித்த துபாய் பட்டத்து இளவரசர், மனித உயிர்களைப் பாதுகாப்பதில் அவர் வெளிப்படுத்திய துணிச்சலையும் பொறுப்புணர்வையும் பாராட்டியிருந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி