நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஐரோப்பா செய்தி

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ் பெண்

  • September 12, 2026
  • 0 Comments

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, கம்சி குணரத்தினம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதே, அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நோர்வே பிரதமர் நேற்று போக்குவரத்து அமைச்சராக, கம்சி குணரத்தினத்தை நியமித்துள்ளார். கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள […]

உலகம்

இறையாண்மை மீறல் – நெதன்யாகுவின் சிரிய பயணத்தை விமர்சிக்கும் சவுதி அரேபியா

  • September 12, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிரியாவிற்குள் நுழைந்துள்ளதை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் சவுதி செய்தி நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள தகவலில், சிரியாவின் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு நெதன்யாகு மேற்கொண்ட பயணம், “அந்நாட்டின்  இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல் மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், சிரியப் பிராந்தியத்திற்கு எதிரான இஸ்ரேலிய மீறல்களையும் அத்துமீறல்களையும் நிறுத்துவதுடன்,  1974-ஆம் ஆண்டு […]

உலகம்

காம்பியாவில் போராட்டம் நடத்த தடை – காவல்துறைத் தலைவர் கடும் தொனியில் எச்சரிக்கை

  • September 12, 2026
  • 0 Comments

காம்பியாவில் முறையான அனுமதியின்றி போராட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக நீண்ட நேரம் அமுல்படுத்தப்படும் மின் வெட்டை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுகளை பிரயோகித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. “இக்கணமே, அங்கீகரிக்கப்பட்ட அனுமதி இல்லாமல் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்,” என்று காம்பியாவின் காவல்துறைத் தலைவர்  சீடி முக்தார் டூரே (Seedy Mukhtar Touray) தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில், யாரும் ஒன்றுகூடவோ, கலவரத்தை ஏற்படுத்தவோ […]

உலகம்

ஹிஸ்புல்லாவின் முக்கிய சுரங்கப்பாதை தகர்ப்பு – 4.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு

  • September 12, 2026
  • 0 Comments

லெபனானில் ஹிஸ்புல்லா போராளிக் குழுவினால் கட்டப்பட்ட சுரங்கப்பாதையை இஸ்ரேலிய துருப்புகள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையைத் தொடரவும், ஹிஸ்புல்லா மற்றும் கூடுதல் இடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹிஸ்புல்லா  கட்டளை மையம், […]

உலகம்

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு ஆதரவு – அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் பெண்

  • September 12, 2026
  • 0 Comments

‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (Islamic State) அமைப்புக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு “அந்நிய பயங்கரவாதிகளை” (alien terrorists) வெளியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட, அதிகம் அறியப்படாத நீதிமன்றத்தின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் வழக்கு இதுவாகும். டெக்சாஸில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியேறியாக வசித்து வந்த 47 வயதான நசிரா ஹாஜி ஜாதா (Nazira Haji Zada), ஜூலை மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயில் தடம் புரண்டு விபத்து – 44 பேர் காயம்

  • September 12, 2026
  • 0 Comments

பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவன் (Rouen) மற்றும் கேன் (Caen) நகரங்களுக்கு இடையே ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 44 பேர் காயமடைந்ததாக பிரெஞ்சு அதிகாரிகளும் ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் நிர்வாகத் தலைவரான ஜீன்-பெனாய்ட் ஆல்பர்டினி Jean-Benoit Albertini தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு பொருளின் மீது மோதியதாலேயே ரயில் தடம் புரண்டதாக பிரெஞ்சு காவல் துறை […]

உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று – 7000ஐக் கடந்தது

  • September 12, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், வைரஸ் தொற்று புதிய மாகாணம் ஒன்றுக்கும் பரவியுள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. எபோலாவின் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையால் ஏற்பட்ட தொற்று பரவல், காங்கோ வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பரவலாக மாறியுள்ளது. கடந்த 2014-2016 காலகட்டத்தில், கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 28,600-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 11000  […]

உலகம்

ஈராக்கில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் – சவுதியின் குழாய் வழித்தடம் பாதிப்பு

  • September 12, 2026
  • 0 Comments

ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களால் கிழக்கு-மேற்கு’ (East–West) குழாய் வழித்தடம் தாக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது. “ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குழாய் வழித்தடத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈராக் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பதில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க அந்நாட்டு […]

ஐரோப்பா

ஒன்ராறியோவின் முதல் AI இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்

  • September 11, 2026
  • 0 Comments

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர்  டக் ஃபோர்டினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. விஜய் தணிகாசலம்  2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப்  பணியாற்றி வருகிறார். அத்துடன்  2023ஆம் ஆண்டில்  ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம் ஆண்டில் […]

ஐரோப்பா

நோர்வே அரசக் குடும்பத்தில் மற்றுமொரு மரணம்

  • September 11, 2026
  • 0 Comments

நோர்வேயின் இளவரசி ஆஸ்ட்ரிட் Astrid   தனது 94 ஆவது வயதில் காலமானார். தனது சகோதரரும் மறைந்தவருமான ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் ஹரால்ட் மன்னர், 35 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு கடந்த மாதம் தனது 89வது வயதில் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மகன் எட்டாம் ஹாக்கான் மன்னராகப் பதவியேற்றார்.