உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று – 7000ஐக் கடந்தது

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், வைரஸ் தொற்று புதிய மாகாணம் ஒன்றுக்கும் பரவியுள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

எபோலாவின் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையால் ஏற்பட்ட தொற்று பரவல், காங்கோ வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பரவலாக மாறியுள்ளது.

கடந்த 2014-2016 காலகட்டத்தில், கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 28,600-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 11000  பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

தற்போது பரவும் புதியவரை திரிபு இந்த எண்ணிக்கையை விஞ்சியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,398-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், ஏழு மாகாணங்களில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,022-ஐ எட்டியுள்ளது.

இதேவேளை தொற்று பரவலின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில், நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘தெற்கு உபாங்கி’ (South Ubangi) மாகாணத்தில் ஒருவருக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்தனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்