உலகம்

ஒருங்கிணைந்த ராணுவ கட்டளை மையத்தை அமைக்க GCC ஒப்புதல்

அமெரிக்க நட்பு நாடுகளின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC), கூட்டு முன்நிலை கட்டளை மையத்தை (joint forward-command centre) அமைக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பஹ்ரைனில் நடைபெற்ற GCC பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராணுவ ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை வளைகுடா நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த ராணுவ கட்டளை மையத்தின் தலைமையகம் குவைத்தில் அமையும் என்றும், இதற்கென ராணுவப் படைகள் ஒதுக்கப்படும் என்றும் GCC பொதுச்செயலாளர் ஜாசெம் அல்-புதைவி Jasem AlBudaiwi  தெரிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் ஓமன் உள்ளிட்ட ஆறு GCC உறுப்பு நாடுகள், ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

ஈரான் தனது பதிலடித் தாக்குதல்கள் அமெரிக்க இலக்குகளை, குறிப்பாக GCC நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை நோக்கியே நடத்தப்பட்டதாகக் கூறினாலும், அவற்றில் பல துறைமுகங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பொதுமக்களுக்கான இடங்களையே குறிவைத்தன.

ஈரானிலிருந்தும், ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் மற்றும் ஏமன் நாட்டு ஆயுதக் குழுக்களிடமிருந்தும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், வளைகுடா அரபு நாடுகள் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்