உலகம்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மக்கள் அழுத்தம்

அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியினர் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவரவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்து கணிப்பொன்று அம்பலப்படுத்தியுள்ளது.

நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், 71 சதவீதமான அமெரிக்கர்கள், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

அதேநேரம் 62 சதவீதமானோர் ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி மீதான வரிகளை ரத்து செய்யும் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.

ஈரானுடனான போர் எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. இது அந்நாட்டின் பணவீகத்தை அதிகரித்ததோடு, மக்களின் வாழ்க்கை செலவையும் உயர்த்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்கு இந்தப் போர் அவசியம் என்று ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

இந்த வரிகள், மலிவான இறக்குமதிகளிலிருந்து அமெரிக்கத் தொழில்துறையைப் பாதுகாப்பதன் மூலம் அதனை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் ட்ரம்பின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இடைக்கால தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்