மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் பாதையை (Oil Pipeline) தற்காலிகமாக மூடியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: ட்ரோன் தாக்குதலால் சவூதியில் பதற்றம்

  • September 12, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் பாதையை (Oil Pipeline) தற்காலிகமாக மூடியுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஈரான் எல்லையை ஒட்டியுள்ள தனது மாகாணம் ஒன்றில் இருந்துதான் தொடங்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஈராக், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, அப்பாந்தியத்தின் ராணுவத் தளபதியையும் […]

மேற்குலக நாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை 'பிரிக்ஸ்' (BRICS) அமைப்பு உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்குலக கட்டுப்பாடுகள் இல்லாத புதிய உலகப் பொருளாதார தளம்: புடின் வலியுறுத்து

  • September 12, 2026
  • 0 Comments

மேற்குலக நாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பு உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மோடியும் புடினும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

  • September 12, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் இன்றைய தினம் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். “தேசபக்தர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம்  நண்பகலில், போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth ஆரம்பமாகும். “வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காகவே” இந்த முகக்கவசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே […]

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • September 12, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் வடகிழக்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள டெலுக்நாகா (Teluknaga) அருகே நேற்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 359 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கிழக்கு இந்தோனேசியாவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது 100 பேர் உயிரிழந்தும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்க பாடசாலைகளில் உலோக தண்ணீர் போத்தல்களுக்கு தடை

  • September 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா – இந்தியானாவில் உள்ள பாடசாலைகளில் உலோகத் தண்ணீர் போத்தல்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த போத்தல்கள் சில சமயங்களில் கூர்மையான ஆயுதங்களாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி, யெட்டி மற்றும் ஓவாலா போன்ற பிராண்டுகளின் உலோகத் தண்ணீர் பாட்டில்கள் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர்களிடையே பெரும் பிரபலமடைந்துள்ளன. இந்த உலோகப் பாட்டில்களின் அதீத நீடித்துழைக்கும் தன்மை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் இந்த போத்தல்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினம் பாடசாலைகளில் இடம்பெற்றும் சிறிய வாக்குவாதங்களில் […]

இலங்கை

மட்டக்களப்பில் சோகம் – கோவில் திருவிழாவில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

  • September 12, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவின்போது, ​​வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். உயிரிழந்தவர் கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என ‘அடையாளம் காணப்பட்டள்ளார். நேற்று (11) இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது, ​​இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. கொளுத்தப்பட்ட பட்டாசு ஒன்று வெடிக்காததால் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தச் சிறுவன் அதனைப் பார்வையிடுவதற்காக அருகில் சென்றபோது அது திடீரென வெடித்ததாக ‘தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் […]

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நட்சத்திரம் டெய்லா மீத் 30 வயதில் காலமானார்

  • September 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆதரவற்ற நாய்களுக்குப் மறுவாழ்வு அளித்து, அவற்றுக்கு புதிய வீடுகளைக் கண்டறிய உதவும் ‘தி டாக் ஹவுஸ் ஆஸ்திரேலியா’ (The Dog House Australia) என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். அவரது மறைவை உறுதிசெய்து அஞ்சலிச் செய்தி வெளியிட்டுள்ள அந்நிகழ்ச்சி நிர்வாகம், விலங்குகள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் உருக்கமாக […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. இந்தியா செய்தி

பிரிக்ஸ் மாநாடு இன்று ஆரம்பம்: கவனத்தை ஈர்த்த ‘தாமரை’

  • September 12, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்​டபத்​தில் இன்று தொடங்​கு​கிறது. மாநாட்டை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் வைக்​கப்​பட்​டிருக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்​னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. இந்​தி​யா​வின் தேசிய சின்​ன​மான தாமரை மலரே, பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் சின்​ன​மாக​வும் மாறி​யிருக்​கிறது. இதன் நடு​வில் “நமஸ்​தே” (வணக்​கம்) வடிவம் பொறிக்​கப்​பட்டு இருக்​கிறது. உற்சாக வரவேற்​பு, […]

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

அனல் கக்கும் அரசியல் களம்: மஹிந்த, அநுர இன்று களத்தில்

  • September 12, 2026
  • 0 Comments

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. மற்றுமொரு முக்கிய மாவட்டமான பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணி இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். எதிரணிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க […]

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

நல்லிணக்க முயற்சி குறித்து சீனாவுக்கு இலங்கை விளக்கமளிப்பு

  • September 12, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சீனத் தூதுவரை சபாநாயகர் வரவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். […]