ஐரோப்பா

பிரான்ஸில் ரயில் தடம் புரண்டு விபத்து – 44 பேர் காயம்

பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவன் (Rouen) மற்றும் கேன் (Caen) நகரங்களுக்கு இடையே ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 44 பேர் காயமடைந்ததாக பிரெஞ்சு அதிகாரிகளும் ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் நிர்வாகத் தலைவரான ஜீன்-பெனாய்ட் ஆல்பர்டினி Jean-Benoit Albertini தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத ஒரு பொருளின் மீது மோதியதாலேயே ரயில் தடம் புரண்டதாக பிரெஞ்சு காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக பிரெஞ்சு ரயில்வே நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்