ஈராக்கில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் – சவுதியின் குழாய் வழித்தடம் பாதிப்பு
ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களால் கிழக்கு-மேற்கு’ (East–West) குழாய் வழித்தடம் தாக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது.
“ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குழாய் வழித்தடத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈராக் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பதில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், “தனது இறையாண்மை, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமையை” சவூதி அரேபியா தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை அது வலியுறுத்தியது.





