ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிலிருந்து அமெரிக்க விமானங்கள் ஜெர்மனிக்கு மாற்றம்: பின்னணி என்ன?

ஈரானிடமிருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் RAF மில்டன்ஹால் விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனியிலுள்ள இராணுவத் தளமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிடமிருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் RAF மில்டன்ஹால் விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனியிலுள்ள இராணுவத் தளமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, RAF மில்டன்ஹால் மற்றும் RAF லேக்கன்ஹீத் ஆகிய இரு விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை FPCON Charlie ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

“எமது விமானங்கள், பணியாளர்கள் மற்றும் இராணுவத் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்” என அமெரிக்க அதிகாரியொருவர் ABC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்க விமானப்படை விமானங்கள் வெவ்வேறு இராணுவத் தளங்களுக்கு இடையில் மாற்றப்படுவது வழமையான நடைமுறை என அமெரிக்க விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விமானங்களின் நகர்வுகள் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் RAF விமானப்படைத் தளத்தில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த B-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் ஒக்டோபர் மாதம் மீண்டும் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் செப்டெம்பர் மாதம் ஏழு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்களில் இருவர் மீது பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர், பிரித்தானியாவுக்குள் ஈரானிய உளவுத்துறைக்கு உதவ முயன்றிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி