இலங்கை செய்தி

இலங்கைக்கு அதிவேக ரோந்துப் படகுகள்:ரூ. 208 கோடி வழங்குகிறது ஜப்பான்

இலங்கை கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் சுமார் 208 கோடி ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் சுமார் 208 கோடி ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் (Official Security Assistance – OSA) கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கைப் பரிமாற்ற ஆவணங்களில் இன்று (10) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமதா அகியோ, ஜப்பான் அரசாங்கத்தின் சார்பிலும் கையெழுத்திட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படைக்கு 25 அதிவேக ஊதப்பட்ட ரோந்துப் படகுகள் (Rigid Hull Inflatable Boats – RHIBs) வழங்கப்படவுள்ளன.

இந்தப் படகுகள் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படவுள்ளன.

கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட அமுலாக்கப் பணிகளை வலுப்படுத்துவதற்கு இந்தப் படகுகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கடல்சார் செயற்பாடுகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புச் சவால்களைக் கருத்திற்கொண்டு இந்த உதவி வழங்கப்படுகிறது.

இதன் மூலம், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தயார்நிலை மேம்படுவதுடன், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்புப் பணிகளையும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டிலும் இலங்கை கடற்படைக்காக நீண்டதூர மற்றும் குறுந்தூர ஆளில்லா விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் 500 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை