இலங்கை ஐரோப்பா செய்தி

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ் பெண்

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.

நோர்வே நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, கம்சி குணரத்தினம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதே, அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நோர்வே பிரதமர் நேற்று போக்குவரத்து அமைச்சராக, கம்சி குணரத்தினத்தை நியமித்துள்ளார்.

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள நிலையில் நோர்வே அமைச்சரவையில் முதல் முறையாக ஈழத் தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை