ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. செய்தி

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்திய மகளிர் அணி

  • September 14, 2026
  • 0 Comments

ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘T-20’ தொடர் நடந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன்இலங்கை அணியை எதிர்கொண்டது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவி ஹர்மன்பிரீத் கவுர், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி […]

உலகம்

கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ அந்தஸ்து – ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

  • September 13, 2026
  • 0 Comments

கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை விரும்புகிறது என்றும், அந்த அமைப்பில் கனடா ஒரு “இணை உறுப்பினராக” (associate member) இணைய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது என்றும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கடந்த காலங்களில் உறுப்பினர் சேர்க்கை விதிகள் விஷயத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படாத ஐரோப்பிய ஒன்றியம், தற்போது […]

ஐரோப்பா

சுவீடனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – அரியாசனத்திற்காக மோதும் இரு தலைவர்கள்

  • September 13, 2026
  • 0 Comments

சுவீடனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சி வெற்றிவாகை சூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பழமைவாதக் கொள்கை கொண்ட பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மீண்டும் ஒரு பதவிக்காலத்தைப் பெற முயல்கிறார். ஆனால், அவர் ஆட்சியில் நீடிப்பது ‘ஸ்வீடன் டெமாக்ராட்ஸ்’ (Sweden Democrats) கட்சியின் ஆதரவைப் பொறுத்தே அமையும். […]

இலங்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உச்சக்கட்ட வெப்பநிலை

  • September 13, 2026
  • 0 Comments

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நாளை (14) நண்பகல் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் (NDEWC) இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இதற்கமைய  வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு   ‘எச்சரிக்கை’ மட்டத்தில் நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலை நிலவுவதைக் கருத்தில் […]

உலகம்

துருக்கி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 26 பேர் கைது

  • September 13, 2026
  • 0 Comments

துருக்கியில் விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆறு LGBTQ+ அமைப்புகளின் அலுவலகங்களிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர். இதற்கமைய 12 மாகாணங்களில் சுமார்  38 சந்தேகநபர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், கடத்தல் மதுபானம் […]

ஐரோப்பா

போலந்து எல்லைக்கு அருகில் பதற்றம் – பயணிகள் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

  • September 13, 2026
  • 0 Comments

  இந்த தாக்குதல் இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் உக்ரைனின் வோலின் (Volyn) பிராந்தியத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போலந்து எல்லைக்கு அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா Andrii […]

கருத்து & பகுப்பாய்வு

பிரிக்ஸ் அமைப்பும் சமகால அரசியல் களநிலவரமும்

  • September 13, 2026
  • 0 Comments

அண்மையில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கூட்டமைப்பின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பில் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பிரிக்ஸ் என்பது முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட பல நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். ஆரம்பத்தில், இந்த அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னர், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகள் இதில் இணைந்தன. 1). பிரிக்ஸ் என்பதன் பொருள் இந்த வார்த்தை, முக்கிய […]

உலகம்

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக போராட்டத்திற்கு ஏற்பாடு – சஜித் அழைப்பு

  • September 13, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரு் 24 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள்  கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட 22-வது […]

உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல்

  • September 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இன்று கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளுக்கு அப்பால் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது. எனினும், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.  

உலகம் முக்கிய செய்திகள்

243 பயணிகளுடன்  புறப்பட்ட பயணிகள் கப்பல் மாயம் – ஒருவர் உயிரிழப்பு

  • September 13, 2026
  • 0 Comments

ஜாவா கடற்கரைப் பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஒருவர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 பயணிகளுடன்  புறப்பட்ட ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் பன்ஜார்மாசின் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது. இருப்பினும் ஜவா பகுதியில் வைத்து அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புப் பணி அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் […]