உலகம் முக்கிய செய்திகள்

243 பயணிகளுடன்  புறப்பட்ட பயணிகள் கப்பல் மாயம் – ஒருவர் உயிரிழப்பு

ஜாவா கடற்கரைப் பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஒருவர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

243 பயணிகளுடன்  புறப்பட்ட ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் பன்ஜார்மாசின் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் ஜவா பகுதியில் வைத்து அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புப் பணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகளில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 103 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,