நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் பிரித்தானியாவில் சுதந்திரமாக வாழும் 20,000 குற்றவாளிகள்
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சுமார் 20,000 வெளிநாட்டு குற்றவாளிகள் பிரித்தானிய சமூகங்களில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான புள்ளிவிபரங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களின்படி சில நாடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 பேரில் ஒருவரே வெளியேற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நைஜீரியா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த, வெளியேற்றப்படக் காத்திருக்கும் குற்றவாளிகளில், 5 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் பிரித்தானியாவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியில் 2020-ல் சுமார் 8,000 ஆக இருந்த ஒட்டுமொத்த வெளியேற்றங்களின் எண்ணிக்கை, தொழிற்கட்சி (Labour Party) ஆட்சியில் 2025-ல் 36,000 ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் வெளிநாட்டு குற்றவாளிகளின் பங்கு 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக புள்ளிவிபரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
மேலும் வெளியேற்றப்படக் காத்திருக்கும் 773 நைஜீரிய குற்றவாளிகளில், கடந்த 12 மாதங்களில் 37 பேர் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரியாவில் 569 குற்றவாளிகள் சமூகத்தில் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேற்றும் விகிதம் குறைவாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




