ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் இன்று கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளுக்கு அப்பால் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
எனினும், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.




