ஐரோப்பா

போலந்து எல்லைக்கு அருகில் பதற்றம் – பயணிகள் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

 

இந்த தாக்குதல் இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் உக்ரைனின் வோலின் (Volyn) பிராந்தியத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போலந்து எல்லைக்கு அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா Andrii Sybiha, புட்டினின் இந்த  பயங்கரவாத செயல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புகளின் கதவுகளை நேரடியாகத் தட்டும் செயலாகும்.

அன்பிற்குரிய கூட்டாளிகளே, ரஷ்யக் காட்டுமிராண்டிகள் உங்கள் வாசலில் வந்து நிற்கிறார்கள்,”எனத் தெரிவித்ததுடன்,  மொஸ்கோ மீது கூடுதல் தடைகளை விதிக்கவும் அழைப்பு விடுத்தார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்