இலங்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உச்சக்கட்ட வெப்பநிலை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நாளை (14) நண்பகல் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் (NDEWC) இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இதற்கமைய  வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு   ‘எச்சரிக்கை’ மட்டத்தில் நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெப்பமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்