உலகம்

துருக்கி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 26 பேர் கைது

துருக்கியில் விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆறு LGBTQ+ அமைப்புகளின் அலுவலகங்களிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதற்கமைய 12 மாகாணங்களில் சுமார்  38 சந்தேகநபர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், கடத்தல் மதுபானம் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அங்காராவைச் சேர்ந்த LGBTQ+ அமைப்பான ‘Kaos GL’, குறைந்தது 50 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழங்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LGBTI+ அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் உரிமைப் போராளிகள் தொடர்பான டஜன் கணக்கான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளுக்கான அணுகலை முடக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும்  தெரிவித்தனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்